/ புத்தக மதிப்புரை / கவியுகன் கவிதைகள்
கவியுகன் கவிதைகள்
----------------------------------------------------------------------க விதைகளின் அணிவகுப்பாக மலர்ந்துள்ள நுால். கவிதை உணர்வு என் இதயச் சூட்டிலிருந்தே ஏற்றுமதியானது; வறுமையே கவிதையின் சொத்து என தொடங்கி, 19 தலைப்புகளில் உள்ளது. சமூக அவலங்களை கண்டு, ‘பெருமாளே நீயும் பத்தாவது அவதாரம் எடுக்க வேண்டும்... அரசியல் இரணியர்களை அழிக்க’ என அறச்சீற்றத்தை வெளிப்படுத்துகிறது. ‘முடியாதவை முயலாதவை; தெரியாதவை தேடாதவை; வெல்லாதவை இல்லாதவை’ என இளைய சமுதாயத்திற்கு நம்பிக்கை ஊட்டுகிறது. எதார்த்த வாழ்வையும், இன்றைய சூழலையும் பிரதிபலிக்கிறது புதுக்குறள்கள். சிபாரிசுகள் சிம்மாசனம் ஏறியதால், தகுதிகள் திருவோடு ஏந்துகின்றன என்கிறது. சிந்திக்கத் துாண்டும் நுால். – புலவர் சு.மதியழகன்




