/ கதைகள் / கீழேயும் ஒரு வானம்...

₹ 200

மதுப்பழக்கத்தால் ஏற்படும் கேடுகளை எடுத்து கூறும் நாவல் நுால். கல்வித்துறையில் காவலர் பணியில் சேர்ந்தவர், பணியாற்றிய ஊரில் இளைஞர்கள், குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட அறிவுரை கூறும் வழக்கத்தை மையப்படுத்தி கதை பின்னப்பட்டுள்ளது. இளைஞர்கள் கேலி செய்வதையே பழக்கமாக்கிக் கொண்ட போதும் எதுவும் அவரை பாதிக்கவில்லை. தனக்கு ஏற்படும் இழிவை விட, இளைஞர்கள் குடியை மறந்தால் போதும் என்ற மனநிலையில் செயல்படுவதை காட்டுகிறது. இறுதியில் உருக்கமாக முடிகிறது. எளிய நடையில் சொல்ல வந்த கருத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது. பாத்திரங்களுக்கு வட்டார வழக்கு சொற்களை சேர்த்து, நாவலுக்கு உயிர் கொடுக்கிறது. வானத்தைப் போல் உயர்ந்தவரை பற்றிய நாவல். முகிலை ராசபாண்டியன்