/ கதைகள் / கொன்றைவேந்தன் கதைகள்
கொன்றைவேந்தன் கதைகள்
உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, வாழ்வில் ஏற்றத்தை காட்டும் நன்னெறி கதைகளின் தொகுப்பு நுால். கொன்றைவேந்தன் பாக்களை முன்வைத்து, 30 கதைகள் உள்ளன. எதிர்மறை சிந்தனைகள் இன்றி உருவாக்கப்பட்டுள்ளன. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது எத்தகைய அறிவியல் கருத்தை கொண்டுள்ளது என, பேரனுக்கு தாத்தா சொல்வதாக உள்ளது. பிறருக்கு கொடுக்காமல் பதுக்குபவன், அனைத்தையும் இழப்பான் என கூறுகிறது. ஊரை பகைத்து வாழ்ந்தால் என்ன நடக்கும் என்பதை கதாபாத்திரங்கள் வழியாக எடுத்துரைக்கிறது. புத்தகங்கள் படிப்பதால், நல்லதொரு சமுதாயம் உருவாகும் என்பதை அறிய தருகிறது. ஒவ்வொரு கதையும் பாடம் நடத்துவது போல் உள்ளது. நன்னெறியை புகட்டும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




