/ கதைகள் / கிருஷ்ண சந்தர் சிறுகதைகளும் குறுநாவல்களும்

₹ 190

கிருஷ்ண சந்தர் எழுதிய சிறுகதை மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். ஒரு கதையில், ஐரிஷ் பெண்ணின் அழகையும், பழகும் தன்மையையும் விவரித்துள்ள விதம் அலாதியானது. படிக்கும் போதே பரவச உணர்வை தருகிறது. உண்டு கொழுத்தோரும், உழைத்து இளைத்த ஏழைகளும் எந்த நிலையில் பார்க்கப்படுகின்றனர் என யதார்த்தமாக சொல்கிறது. அரசு இயந்திரம் எத்தகையது என்பதை கண் முன் நிறுத்துகிறது. பரிசுத்தமான காதலையும் பாழ்படுத்தும் அளவு, தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியதை விவரிக்கிறது. அருமை யான கதைகளின் தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்