/ மாணவருக்காக / பள்ளி மாணவர்களுக்கான மொழிப் பயிற்சிகள்

₹ 60

பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் கற்பிக்கும் நுால். பொருள் அறிதல், சேர்த்து பிரித்து எழுதுதல், பிற மொழி நீக்கல், வேறுபாடு அறிதல், மரபுத் தொடர், பழமொழி, நிறுத்தற்குறி என தெளிவாக பயிற்சி தருகிறது. அரை, அறை; கலை, களை போன்ற சொற்களில் உள்ள வேறுபாடுகளை தெரிவித்து உதாரணங்களுடன் விளக்குகிறது. மதிமுகம்-, முகமதி; தேன்தமிழ்-, தமிழ்த்தேன் என்று உவமைத் தொடரை மாற்றிப் போட்டால் உருவகத் தொடராகிவிடும் அற்புதம் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் தரப்பட்டுள்ளன. வல்லினம் மிகும், மிகா இடங்கள்; ஒருமை பன்மை மயக்கம் நீக்கல்; ஆங்கில மொழியாக்க பயிற்சி முறையும் தரப்பட்டுள்ளது. மொழி கற்பிக்கும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை