/ கவிதைகள் / லைவ் வித் நோபிள் தாட்ஸ் (ஆங்கிலம்)
லைவ் வித் நோபிள் தாட்ஸ் (ஆங்கிலம்)
செம்மையான எண்ணங்களின் வண்ணக் கலவையாய் வடித்தெடுக்கப்பட்ட கவிதை புத்தகம். அவலங்களை சாடுவதும், பூமியின் சுற்றுச்சூழலை பேணவும் அறிவுரைக்கிறது. இளைஞர் மனதில் வாய்மை, துாய்மையை வளர்க்கும் உத்வேகத்தை உண்டு பண்ணும் விதமாக உள்ளது. இயற்கையே மனிதனுக்கு முதல் ஆசிரியர் என எடுத்துரைக்கிறது முதற்கவிதை. கெட்டதை பகுத்தறிந்து நலமுடன் வாழ்வதே சிறப்பு என போதிக்கிறது. தேடலின் பயன் தெளிவு தருவதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. அறிவும், அனுபவமும் ஒழுக்கத்தை தருவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உறுதிபட உரைக்கிறது. வளர்ச்சியால் அதிவேகமாக மாறி வரும் சமுதாயத்திற்கு பொறுமையே மிகவும் முக்கியம் என அறிவுரைக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




