/ கதைகள் / மகாமசானம்

₹ 110

புதுமையும், பித்தமும் கலந்த புதுமைப்பித்தனின் மகா சிறுகதைகள்!நாளைய உலகம் நல்லதாக இருக்க இன்றைய உலகின் அழுக்கைச் சொன்னவர் புதுமைப்பித்தன்! எள்ளல் வித்தை யாவும் அறிந்தவர்! துள்ளல் நடைக்குத் தூக்கினார் பேனா!‘வாசிக்க வாசிக்க, பிரமிப்பூட்டுகிறவராகத் திகழ்கிறார் புதுமைப்பித்தன்’ என்கிறார் இந்தக் கதைகளைத் திறம்படத் தொகுத்த உதயசங்கர்.இந்தத் தொகுதியிலேயே மிக நீளமான கதை, ‘செல்லம்மாள்.’ நிரந்தர நோயாளியான மனைவி. அவருக்கு முகம் சுளிக்காமல், பூரண அன்புடன் சேவை செய்யும் கணவர்! கடைசியில் செல்லம்மாளின் மரணம் தவிர்க்க முடியாததாக அமைந்து நம் நெஞ்சை உருக்குகிறது... இந்தக் கதையில் தூக்கலாகத் தெரிவது அந்த ஏழைக் கணவனின் பேரன்பு.‘மகாமசானம்’ தெருவில் அனாதையாகச் செத்துக் கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரன் பற்றிய கதை... ஆனால், அவனுக்கும் உதவி செய்ய இன்னொரு ஏழை இருக்கிறான்! மற்ற மனிதர்கள் யாரும் அவன் சாவைப் பற்றிக் கவலைப்படாததால் சென்னை மாநகரையே மகாமசானம் என்று சாடுகிறார் புலமைபித்தன்!சர்வர் வேலை, ஒரு மனிதனை இயந்திரமாக்கிவிடுவதை, இது மிஷன் யுகம் என்ற கதையில் சித்தரிக்கிறார்.சாயங்கால மயக்கம் – என்றொரு கதை! காளி கோவில் வாசலில் இரண்டு ஆட்டுக்கிடா பலி கொடுப்பதற்காக... நாளை காலையில் பலி கொடுத்து விடுவர். இன்று இரவு இரண்டு கிடாக்களும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. அவரது தத்துவப் பார்வை இந்தச் சண்டையை எடை போடுகிறது... ‘நாளைக்கு இரண்டினுடைய ரத்தமும் அந்தப் பலி பீடத்தில் கலக்குமுன் அதற்குள் என்ன அவசரம்?அது தான் சுவாரஸ்யம்!மாநகரின் கோர முகத்தைச் சொன்னாலும் இங்கும் அன்புள்ள ஜீவன்கள் இருப்பதைப் புதுமைப்பித்தன் குறிப்பிடத் தவறவில்லை! இலக்கியப் பொக்கிஷம்!– எஸ்.குரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை