/ புத்தக மதிப்புரை / மாண்புமிகு மனைவி
மாண்புமிகு மனைவி
உடன்பிறந்த உறவுகள் பல இருந்தாலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் பயணிக்கும் ஒரே உறவு மனைவி மட்டுமே என்பதை இந்நுால் வெளிப்படுத்துகிறது. கவிஞர் இரா.இரவி கவிதைகளாலும், கட்டுரைகளாலும் மனைவியின் உன்னதத்தையும், மாண்பையும் அழகுற வெளிப்படுத்துகிறார். தன் மனைவியுடன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் மறைந்த தன் மனைவிக்கு இந்நுால் மூலம் புகழஞ்சலி சமர்ப்பித்திருக்கிறார். – ரெங்கா




