/ புத்தக மதிப்புரை / மதுரைப் பெருங்கோயில்

₹ 320

மதுரையைப் பற்றியும், மீனாட்சியம்மன் கோயில் பற்றியும் முழுமையாக அலசும் வகையில் இந்நுால் படைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் எந்த குழுவிற்கும் சொந்தமானது இல்லை. இது அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என ஆசிரியர் மணிவண்ணன் தெளிவுபடுத்தியுள்ளார். பெருங்கற்கால கருவிகள் மதுரை துவரிமானில் கண்டறிப்பட்டது போன்ற அரிய தகவல்கள் திகட்டாமல் தரப்பட்டுள்ளது சிறப்பு. மதுரைக்கு பண்பாட்டு தலைநகர் என்ற பெயர் கிடைத்ததற்கு மாதந்தோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களே காரணம் என ஆசிரியர் விளக்கியுள்ளார். மதுரையின் புவியியல் அமைப்பையும், வரலாற்றுப் பின்னணியையும் சுவைபட எழுதியுள்ளார். இளம் தலைமுறையினரும் நம் மண்ணின் பெருமையை அறிந்துகொள்ள வேண்டும் என இந்நுாலை படைத்த ஆசிரியருக்கு ஒரு சல்யூட்! – ரெங்கா


புதிய வீடியோ