/ கவிதைகள் / மேகங்களின் பேத்தி
மேகங்களின் பேத்தி
சுருக்கமாக எழுதப்பட்ட கவிதை களின் தொகுப்பு நுால். அனுபவத்தில் உணர்ந்ததை தனித்துவமாக படைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது. ஒருவன் சட்டை பையிலிருந்து, இன்னொருவன் சட்டை பைக்கு பணம் போகும் இடைவெளி தான், உலகின் மிக நீண்ட பாதை என்று உழைப்பின் கதியை விவரிப்பது தத்துவமயமாக யோசிக்க வைக்கிறது. புனைவுலக கருவுடன், நடப்பு உலக நிகழ்வுகள் நிறுவப்பட்டிருக்கிறது. மெல்லவும், விழுங்கவும் முடியாது கிடக்கும் அவஸ்தையை, ‘விழுங்க எதுவும் உதவலாம்’ என குறிப்பிடுவது யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. வாழ்வின் இன்னொரு மெய் நிலையை புத்தர் வாக்குடன் காட்டுகிறது ‘முகத்திரை’ கவிதை. வாழ்க்கை நீரோட்டத்திற்கு புத்துணர்ச்சியை வெளிச்சமாக காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு




