/ ஆன்மிகம் / மேல்மருவத்துார்
மேல்மருவத்துார்
பங்காரு அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்க நுால். ஆத்திகர்களாக உருமாற்றியதை கூறுகிறது.பெண் குலத்தை உயர்த்த நடைமுறைப்படுத்திய செயல்கள், சமூகப் பணியாற்றி வரும் சக்தி பீடங்கள், பிரமாண்ட தியான மண்டபம், அன்னதானம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான நல உதவி திட்டங்கள் குறித்து விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.விதவையருக்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல், ஊனமுற்றோருக்கு உதவும் கருவிகள், பசு மாடுகள் வழங்குதல், உழவு மாடுகள் வழங்குதல், ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவுகின்ற கருவிகளை தருதல் போன்ற அறப்பணிகள் செய்யப்படுவது பற்றி விளக்கும் நுால்.– இளங்கோவன்