/ இசை, இயல், நாடகம் / நவீன இந்திய சினிமா

₹ 1500

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன சினிமாக்களை அறிமுகம் செய்யும் நுால். தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி, மலையாளம், வங்காளம் என மொழிகளில் சிறப்பு பெற்றுள்ளவற்றை சமூக பின்னணியுடன் அலசி தகவல்களை தருகிறது. நம் நாட்டில் நவீன சினிமா தயாரிப்பில் முக்கிய இடம் வகித்துள்ளோர் பற்றி விவரிக்கிறது. பல மாநிலங்களில் உருவாக்கப்பட்ட சினிமா படைப்புகள் பற்றிய விபரங்களை தருகிறது. அந்தந்த படைப்புகள் உருவான பின்னணி, சமூக செயல்பாடு, இலக்கிய தாக்கம் குறித்த விபரங்களும் பதிவாகியுள்ளன. நவீன சினிமாவை உருவாக்கியோர், படைப்பு களின் முக்கியத்துவம், காலச்சூழல், தொழில் நுட்ப சிறப்புகள் பற்றியும் அலசப்பட்டு உள்ளது. ஏராளமான செய்திகளுடன், படங்களும் தரப்பட்டுள்ளன. இந்தியாவில் நவீன சினிமா பற்றிய நுால். – மதி


புதிய வீடியோ