/ கதைகள் / மூன்றாவது கதவு
மூன்றாவது கதவு
யாரும் பேசுபொருளாக எடுத்துக் கொள்ளாத கருவை தனித்த குரலில் பேசும் 13 சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனதால் உணர்ந்த சித்திரங்கள் எழுத்தாக வடிவம் கொண்டு தனித்து வெளிப்படுகிறது. ஒரு புள்ளியில் பரந்து விரிந்து, மீண்டும் அதே இடத்துக்கு திரும்புவதாக கதைகள் இருப்பது சுவாரஸ்யம். அறுகோண வடிவமாக, சுழலாக, ஜடைப் பின்னலாக, அலை போல, கடிதம், கீறல்கள், விருந்து, மயக்கம் போன்ற கதைகள் உணர்ச்சி மயமாக எழும்பி தாழ்கின்றன. ஊஞ்சல் போல் முன், பின் அசைந்து காலங்களுக்கு இடையே இயங்கும் பெண்டுல அசைவாக உள்ள, ‘குரல்கள்’ கதையும் தனித்துவமாக இருக்கிறது. மன உலகில் முழுமையாக நுழையும், ‘கோவிந்தசாமி’ கதை கருத்துடன் மகிழ்வையும் தருகிறது. சுவாரஸ்யம் மிக்க கதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு