/ கதைகள் / மூங்கில் துளைகள்

₹ 180

சமூக சிக்கல்களை சுட்டிக்காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழைகள் உயர சில நல்ல உள்ளங்கள் காரணம் என்பதை, ‘ஈரம்’ கதை சுட்டிக்காட்டுகிறது. திருநங்கையர் உணர்வுகளை, ‘தாயுமானவன்’ கதை உருக்கமாக சொல்கிறது. கூடு இழந்த பறவைகள், மத்தாப்பு போன்ற கதைகளில் நட்பு, பாடமாக புகட்டப்பட்டுள்ளது. கல்வி, அறிவியல் சிந்தனையுள்ள நட்புகள் சேர்வதை, ‘நுாலகங்களே ஆலயங்கள்’ கதை பதிய வைக்கிறது. குழந்தைகள் ஆசை கலையும் போது ஏற்படுத்தும் தாக்கத்தை, ‘கரடி பொம்மை’ கதை மனம் கரைய வைக்கிறது. வேற்றுக்கிரகத்தில் இயந்திர மனிதர்களின் போராட்டத்தை கூறும் கதை வித்தியாசமாக இருக்கிறது. ‘செல்போன் டவர்’ கதை திருப்பங்கள் நிறைந்தது. இரக்கம், நட்புணர்வுக்கு வழிகாட்டும் நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி