/ புத்தக மதிப்புரை / மூத்தவள் நீயிருக்க...

₹ 60

உள்ளம் தொடும் உன்னத கதைகளின் தொகுப்பு நுால். தான் மெக்கானிக் பணி செய்த போதும், தன் பிள்ளைகளாவது வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்ற தந்தையின் கடமை உணர்வு சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. தியாகியான அக்கா தினமும் வேதனையில் வெந்து துடித்தாளே அதன் காரணத்தை அலசுகிறது. தம்பி கெட்டவன் தான் என்றாலும், கொலை செய்யும் அளவுக்கு ஏன் சென்றான் என்பதை எடுத்துரைக்கிறது. ஒருவன் அயோக்கியனாக இருந்தாலும் உள்ளத்தில் இருந்த நேர்மையை சரி என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. திருமணமே வேண்டாம் என்று தனித்து இருக்க நினைத்தவளை வழிக்கு கொண்டு வந்தது சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது. உள்ளத்தில் தங்கி விடும் சிறுகதை நுால். – டாக்டர் கார்முகிலோன்


சமீபத்திய செய்தி