/ இசை / முத்தொள்ளாயிர மோகனம்
முத்தொள்ளாயிர மோகனம்
சேர, சோழ, பாண்டிய மன்னர் பெருமை பேசும் நுால். வெண்பா யாப்பில் 107 பாடல்களை உடையது. ஒவ்வொரு பாடலுக்கும் சொற்பொருள் விளக்கத்தோடு, உரையும் தரப்பட்டுள்ளது. உரை விளக்கம் பகுதி, பாடல் பொருளை எளிமையாக்கி சொல்கிறது. முத்தொள்ளாயிரப் பாடல்கள் ஹைக்கூ கவிதை வடிவில் உள்ளன. சேர நாட்டின் பெருமையை, ‘அள்ளல் பழனத்து’ என்ற பாடல் விளக்குகிறது. நாட்டில் மக்கள் பயமின்றி வாழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் விளையாடும் கூடல் இழைத்தலுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பெண் கண்ணீரிலும் முத்து தோன்றும் என சொல்கிறது. மன்னர்களின் கொடை மற்றும் படை சிறப்பை விளக்குகிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள நுால். – புலவர் ரா.நாராயணன்




