/ புத்தக மதிப்புரை / முயற்சி வெல்லும்

₹ 150

வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள குறுங்கதைகளின் தொகுப்பு நுால். மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் கைவண்ணத்தில் மலர்ந்துள்ளது. விடாமுயற்சி வெற்றி தரும், நம்பிக்கை நலம் தரும், செயல் விளைவு உட்பட 15 கதைகள் இடம் பெற்றுள்ளன. எளிய நடையில் நேரில் பேசுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகளை ஒட்டியதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் பொருத்தமான பொன்மொழி ஒன்று தரப்பட்டுள்ளது. அது கதை கருவை உள்ளடக்கியுள்ளது. பறவைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதைகளும் உள்ளன. சிறுவர்கள் மனம் மகிழ்வதுடன், நல்ல அறத்தை புரிந்து வாழ்வை அமைத்துக் கொள்ளும் வகையில் எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். – ராம்


முக்கிய வீடியோ