/ ஆன்மிகம் / இந்தக் காலத்திற்கும் பொருந்தும் புராண காலச் சம்பவங்கள்!

₹ 220

புராண நிகழ்ச்சிகளை இந்த காலத்திற்கு பொருந்துமாறு எழுதப்பட்ட நுால். விரதமும் பட்டினியும், கர்ப்பத்தில் காது கேட்குமா, இறைவன் காட்டும் வழி, துரியோதனன் நல்லவனா கெட்டவனா, சாபங்களும் வரங்களும், புராணங்களில் பெண்கள், பாவங்கள் வராமல் இருக்க போன்ற 107 தலைப்புகளில் விளக்கம் தரப்பட்டுள்ளன. மகாபாரத கதையை ஒட்டியே கூறப்பட்டுள்ளன. கீதையில் வரும், ‘நீ எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு’ என்ற தொடர் நிலையாமை தத்துவத்தை சொல்கிறது. துளசியை சர்வரோக நிவாரணியாக போற்றி, அதன் மகத்துவத்தை கதையுடன் இணைத்துக் கூறுகிறது. புராண நிகழ்ச்சிகளை அறிந்து வாழ்க்கையை செம்மை செய்ய உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்


புதிய வீடியோ