/ புத்தக மதிப்புரை / நாகலோக இளவரசி
நாகலோக இளவரசி
நிகழ்வுகளை ஒருங்கிணைத்து கற்பனையாக எழுதப்பட்டுள்ள நாவல். கடம்பர் குல தலைவனின் நோயை தீர்க்க, அவரது மகன் அரிஞ்சயன் தோழனுடன் நாகமலையில் கிடைக்கும் அரிய வகை கண் அலர்ந்த தாமரை மலரை தேடுவது தான் மையக்கதை. வழியில் சந்திக்கும் நாகமலை இளவரசி துணையுடன் அந்த மலரை எடுத்து வந்து, தந்தையை காப்பாற்றுவதை கூறுகிறது. பின்னர் இளவரசியை மணந்து, நாகமலையில் தங்கப்புதையலை கொள்ளையடிக்க வரும் கொடிக்கச்சி வல்லவராயனை போரில் வெல்வதை கூறுகிறது. பன்மலை அடுக்கத்தை நாக நாடாக பிரகடனம் செய்து, மகுடம் சூட்டிக் கொள்வதை மற்றொரு பகுதியாக கூறுகிறது. வணிகத்தை பெருக்குதல், பொற்காசு தயாரித்தல், எழுத்து சீர்திருத்தம் என நிறைவடைகிறது. வித்தியாசமான நாவல் நுால். – பின்னலுார் விவேகன்




