/ கல்வி / நாளை என்ன வேலை?
நாளை என்ன வேலை?
புதிய வகை கல்வி வாய்ப்புகள் பற்றிய தகவல்களை தொகுத்து தந்துள்ள நுால். மேல்நிலைக் கல்வியை முடித்த மாணவ -– மாணவியருக்கு அடுத்து எந்த துறையில் என்ன படிக்கலாம் என்ற திணறல் இருக்கும். இப்படிப்பட்டோருக்கு உதவும் வகையில் உயர்கல்வி குறித்து புத்தகத்தில் ஒவ்வொரு துறை சார்ந்தும் ஏராளமாக தகவல்கள் உள்ளன. நுழைவுத் தேர்வுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பள்ளி கல்விக்கு பின், என்ன செய்யலாம், எங்கு என்ன வகை படிப்பில் சேரலாம் என திணறுவோருக்கு உதவும் வகையில் உள்ளது. படிப்பு மையங்கள், வேலை வாய்ப்புகள் தரக்கூடிய பாடங்களை அறிமுகம் செய்கிறது. படித்த பின் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கிறது. பள்ளி மாணவர்களின் உயர் படிப்புக்கு வழிகாட்டும் தகவல்கள் நிறைந்த நுால். – ராம்




