/ புத்தக மதிப்புரை / நாலடியார் – சமண மாமுனிவர்கள்
நாலடியார் – சமண மாமுனிவர்கள்
பழந்தமிழ் நுாலான திருக்குறளுக்கு அடுத்தபடியாக சிறப்பு பெற்றுள்ள அற இலக்கியமான நாலடியார் செய்யுள்களுக்கு விளக்கவுரை தரும் நுால். சங்க காலத்தில் தோன்றிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மேல்கணக்கு நுால்கள் பற்றி அறிய தருகிறது. சங்கம் மருவிய காலத்தில் வந்தவை பற்றியும் கூறப்பட்டுள்ளது. அரிதாய் பெற்ற பிறவியில் பயனுடன் வாழ, அற்புதமாக வழிகாட்டுதல்களை வழங்குகிறது. செய்யக்கூடிய காரியங்களை காலம் தாழ்த்தாது உடனுக்குடன் செய்ய அறிவுறுத்துகிறது. முற்பிறவியில் செய்த புண்ணிய பயனாக, மனிதப் பிறவி எடுத்துள்ளதைக் குறிப்பிடுகிறது. செய்யுள்களில் தமிழறிவோடு, விஞ்ஞானப் பேரறிவும் உள்ளதை குறிப்பிடுகிறது. வாழ்க்கையை செம்மைப்படுத்தும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




