/ ஆன்மிகம் / நம்ம ஆஞ்சநேயர்
நம்ம ஆஞ்சநேயர்
அனுமனின் பராக்கிரமம், பக்தி, வரலாறு, வணங்குவதால் வரும் பயன்களை கூறும் நுால். அனுமனின் அவதாரம், பிள்ளைப் பருவ லீலைகள், ராமர் பக்தரானது, கோபம் தணித்தது, கிஷ்கிந்தை சேவை, வலிமை உணர்ந்தது கடலைத் தாண்டுதல், இலங்கையில் சீதையைத் தேடல், சஞ்சீவி மலை கொண்டுவரல், ராவணன் வீழ்ச்சி என பல தலைப்புகளில் விளக்கங்கள் உள்ளன. சிரஞ்சீவியான அனுமன் குழந்தைப் பருவத்தில் சூரியனைப் பழம் என பிடிக்க, வானில் தாவிப்பறந்து, இந்திரன் வஜ்ராயுதத்தால் முகத்தில் தாக்க அனுமன் ஆனதை குறிப்பிடுகிறது. பல்வேறு வினாக்களுக்கு வியத்தகு விடைகள் உள்ளன. அனுமன் சாலிசா போற்றிகள், அஷ்டோத்திரமும் தரப்பட்டு உள்ளன. அனுமன் மீது பக்தியும், நம்பிக்கையும் அள்ளித்தரும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்




