/ புத்தக மதிப்புரை / நாடு நலம் பெற நாமும் பங்கு கொள்வோம்

₹ 210

ஆன்மிகம், அரசியல், பொதுநலம் சார்ந்த தகவல்கள் உள்ள புத்தகம். மஞ்சள், குங்குமம், புற்றுமண், வெல்லம், உப்பு, வெண்ணெய், எருக்கம் இலை, விபூதி, சந்தனம் பற்றி கூறப்பட்டுள்ளது. விநாயகர் உருவம் பிடித்து வழிபடுவதால் ஏற்படும் பயன்கள் சுவைபட உள்ளது. பகவதி அம்மன், சூரனோடு போரிட்ட ஒன்பது இரவுகள் தான் நவராத்திரி என, புது கருத்தை கூறுகிறது. ஏழுமலையானுக்கு மார்கழியில் வில்வம் சாத்தப்படுவதை குறிப்பிடுகிறது. இது எந்த பெருமாள் கோவிலிலும் இல்லாத பெருமை என சுட்டிக்காட்டுகிறது. திருப்பதியில் தல மரமாக புளி உள்ளதை அறிய தருகிறது. சிதம்பரம் கோவிலில் கோபுரங்கள் நேர் எதிரில் இல்லை; காரணம் ஸ்வஸ்திக் என உரைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை