/ இசை / நியாயங்கள் சாவதில்லை
நியாயங்கள் சாவதில்லை
படிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏற்ப எழுதப்பட்ட நாடகங்களின் தொகுப்பு நுால். தொகுப்பில் இரண்டு வகை நாடகங்கள் இருக்கின்றன. முதல் நாடகம், ‘நியாயங்கள் சாவதில்லை’ நடிப்பதற்கு ஏற்ற வகையில் 20 காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. களங்கப்பட்ட பெண் திருமணம் வேண்டாம் என்கிறாள். அப்பா, தங்கையின் வற்புறுத்தலால் திருமணம் நடக்கிறது. அதை சரி செய்வதாக கதை முடிவு அமைந்துள்ளது. வித்தியாசமான படைப்பு இது. காலம் உண்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள, ‘சம வாழ்வு’ மேடையில் நடிப்பதற்கும், படிப்பதற்கும் ஏற்ற வகையில் படைக்கப்பட்டிருக்கிறது. ஜாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கக் கூடாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடகங்களின் தொகுப்பு நுால். – சீத்தலைச் சாத்தன்




