/ புத்தக மதிப்புரை / நுாறாயிரம் ஆண்டுகள் சேமித்த காதல்
நுாறாயிரம் ஆண்டுகள் சேமித்த காதல்
காதலை மையமாக உடைய சுவாரசியமான நாவல் நுால். அன்னபூர்ணா என்ற கதாபாத்திரத்தை மையமாக்கி பின்னப்பட்டுள்ளது. பாதி வரை சமூக பிரச்னை பின், எதிர்பாராத திருப்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பூர்ணா என்ற பெண் ஒருவரிடம் மனதை பறி கொடுத்து, ஏமாந்து பிரச்னைகளை சந்திப்பதை கூறுகிறது. இறுதியில் காதலனிடமே சேர்வதாக விறுவிறுப்பாக செல்கிறது. எளிய நடையில் எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்துள்ளது. கதையின் இடையில் ஏற்படும் சுவாரசியமான திருப்பங்களுக்கு இறுதியில் பதில் அளிக்கும் வகையில் புதிய உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. படிக்க படிக்க சுவாரசியத்தை ஏற்படுத்தி கவர்ந்து இழுக்கிறது. காதல் காவிய நாவல். – வி.ராமலிங்கம்




