/ கதைகள் / ஒவ்வொருவரின் நியாயப் பக்கங்கள்

₹ 70

வெளிநாட்டு வேலையில் உள்ள அபத்தங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுகதைகளில் ஒவ்வொரு போதனைகள் உள்ளன. சிறையில் இருப்போர் எல்லாரும் கெட்டவர் இல்லை; வெளியில் சுதந்திரமாக இருப்போர் புத்தரும் இல்லை என்ற உண்மையை தோலுரிக்கிறது. அண்ணன் – தம்பி உறவு கொலையில் முடிய காரணம், சொத்து மட்டுமல்ல காதலும் என்கிறது. திருநங்கைக்கு திருமணம் செய்து தனிமனித சுதந்திரத்தை போற்றுகிறது ஒரு கதை. வாழ்க்கையில் யார் நினைவுகளையாவது சுமந்து தான் வாழ்கிறோம். துரோகி, நண்பர்களை மறக்க முடியாது என பேசுகிறது ஒரு கதை. காதலியை கணவனோடு பார்க்கும்போது ஏற்படும் மனநிலை குறித்தும் உள்ளது. பொழுதுபோக்க ஏற்ற சிறுகதை நுால். – சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ