/ ஆன்மிகம் / பாமரனின் பகவத்கீதை
பாமரனின் பகவத்கீதை
போர்க்களத்தில் உறவினர்களுடன் போரிட தயங்கிய அர்ஜுனனுக்கு, கிருஷ்ணர் போதித்த தர்ம நெறிகளின் விளக்கமாக மலர்ந்துள்ள நுால். மனதில் பதியும் வண்ணம் எளிமையாக படைக்கப்பட்டுள்ளது.பகவத்கீதை 18 அத்தியாயங்களும், 702 ஸ்லோகங்களும், 115 கட்டுரைகளாக தரப்பட்டுள்ளன. முக்தியடைவதற்கு மூன்று யோகங்கள் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட வேலையை செய்ய கற்றுக் கொண்டவனே ஜெயிக்க முடியும்; பலனை எண்ணி வேலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. சனாதன தர்மத்துக்கு கிருஷ்ணர் தரும் விளக்கம் அற்புதமாக உள்ளது. தற்பெருமை பேசுவது தற்கொலைக்கு சமம்; நான் யார் என அறிவது தான் ஆன்ம ஞானம் என்பதை எடுத்துரைக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய நுால். – சீத்தலைச் சாத்தன்