/ புத்தக மதிப்புரை / பாராட்டுங்கள் பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
பாராட்டுங்கள் பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
திறமையுள்ளோரை உற்சாகமாக பாராட்ட கற்றுத்தரும் புத்தகம். முயற்சி செய்வோரை பாராட்ட கூறுகிறது. அது எல்லாருக்கும் பிடிக்கும் என்பதை, 32 கட்டுரைகளில் அமைத்து காட்டுகிறது. வெற்றிக்கான வழியாக நம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்வதை எடுத்துரைக்கிறது. உயர்ந்த எண்ணங்களை வளர்த்து, சுய மதிப்பை பெருக்கிக் கொள்வதை கடை பிடிக்க கூறுகிறது. முயற்சி உள்ளோரிடம் தெய்வம் முந்தி வந்து நிற்கும் என்பதை அறிய வைக்கிறது. வெற்றி கடைச் சரக்கு அல்ல; இலக்குக்கு முயற்சியே மிக முக்கியம் என்கிறது. வாய்க்கால் வழியோடும் நீர் வயலுக்கு உதவுவது போல், நல்ல நண்பர்கள் வாய்த்தால் வெற்றி நிச்சயம் என உரைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்




