/ சிறுவர்கள் பகுதி / பறவைகள் – 1

₹ 200

தமிழகத்தில் உலா வரும் பறவைகளை அடையாளம் காண உதவும் விதமாக, பளிச் என வண்ணப் படங்களுடன் வெளியாகியுள்ள நுால். இயற்கை மீது பேரார்வம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியாகியுள்ள படங்கள், சிறுவனாக இருந்த போது, இந்த புத்தக ஆசிரியரால் எடுக்கப்பட்டவை என்பது வியப்பு தரும் செய்தி.பல பறவை காப்பகங்களில் நீண்ட நேரம் காத்திருநது, பொறுமையுடன் எடுக்கப்பட்ட பறவைப் படங்கள் மிகத் தெளிவாக பதிவாகியுள்ளன. மொத்தம், 80 பறவைகளின் வண்ணப்படங்களுடன் அவை பற்றிய அறிமுகம் செய்தியும் உள்ளது. இயற்கை மீதான ஆர்வமும், காதலும் நுால் முழுதும் வெளிப்பட்டுள்ளது. பறவைகளின் பல்வேறு செயல்பாடுகள் இந்த படங்களில் அடங்கியுள்ளன. அன்றாடம் வீட்டருகே உலா வரும் பறவைகளை எளிதாக அடையாளம் கண்டு ரசிக்கத்தக்க வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பறவையியல் தொடர்பான அடிப்படை அறிவை வளர்க்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை