/ புத்தக மதிப்புரை / பாருக்குள்ளே நல்ல நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
விடுதலைக்கு பாடுபட்டோரின் தியாக வரலாற்றை விவரிக்கும் நுால். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, அவரது துணைவி கமலா நேரு, சகோதரிகள் இருவர் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றதை விவரிக்கிறது. நாட்டு பிரிவினைவாதம், முதல் பிரதமராக நேரு பதவியேற்றது குறித்த விபரங்களை தருகிறது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளுடன் சுபாஷ் சந்திரபோஸ் செய்த ஒப்பந்தம் பற்றிய விபரங்கள் உள்ளன. இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய ெசய்தியும் விளக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மணிதேவி, பிரான்ஸ் பாரிசில் நடந்த பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் பங்கேற்றது குறிக்கப் பட்டுள்ளது. நாட்டுப்பற்றை வளர்க்கும் நுால். – புலவர் சு.மதியழகன்




