/ தமிழ்மொழி / பதினெண் கீழ்க்கணக்கு நுால்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நுால்கள்
பழந்தமிழரின் அக, புற வாழ்வு பற்றி கூறும் நுால். எட்டுத்தொகை, பத்துப்பாட்டிற்குப் பின் அறவாழ்வு பற்றி விளக்குகிறது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் உட்பட 18 நுால்களில், சில பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. களவொழுக்கம், பரத்தையர் தொடர்பு, கள்ளுண்ணல் போன்ற தீய பழக்கங்கள் விரவியிருந்ததை நிராகரித்து, ஒழுக்க விழுமியங்களை முதன்மைப்படுத்துகிறது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை, ஏலாதி, முதுமொழிக்காஞ்சி உட்பட 11 நுால்கள் ஒழுக்க நெறி கூறுவதாக தெரிவிக்கின்றன. களவழி நாற்பது புறப்பொருள் என்கிறது. பழந்தமிழர் பண்பாட்டு செய்திகளை எளிமையாகக் கூறும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து




