/ பயண கட்டுரை / பயணங்கள் ஒருபோதும் முடிவதில்லை
பயணங்கள் ஒருபோதும் முடிவதில்லை
அனுபவமும் நினைவுகளும் நிரம்பிய வாழ்க்கை முறையை, பயணங்களால் மட்டுமே சிறப்பாக நிரப்ப முடியும் என உரைத்து துவங்கும் புத்தகம்.அமெரிக்கா, ரஷ்யா, கென்யா உட்பட 46 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பேராசிரியரின் அனுபவங்களையும், சுற்றுலா வழிகாட்டுதலையும் பகிர்ந்து கொள்கிறது. சுற்றுலாவின் வகை, அதன் அவசியம், பயணத் திட்டமிடல், பயணத்தில் அனுமதிக்கப்படுபவை, அவற்றின் அளவு, பயணத்தின் மூலம் உடல், மனதிற்கு கிடைக்கும் நன்மைகள் போன்ற தகவல்களை அறியலாம்.பயணங்கள் நமக்கு பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கற்றுக் கொடுக்கும்; பயணம் அறிவாளியை மேதையாக்கும் போன்ற தத்துவங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. – பெருந்துறையான்