/ ஜோதிடம் / புனர்பூ தோஷம்

₹ 200

புனர்பூ தோஷம் என்பது சந்திரன், சனி கிரக சேர்க்கை. இந்த சேர்க்கையால் உண்டாகும் பலன் பற்றி எடுத்து கூறும் நுால். ஜோதிடக் கலையின் நுட்பங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. புனர்பூ தோஷம் என்ற பெயர் ஜோதிடர்களால் சூட்டப்பட்டதாக கூறுகிறது. சனி கிரகம், சந்திரன், கோசார பலன்கள், பரிகாரத் திருத்தலங்கள் பற்றி விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்டுள்ளது. புனர்பூ தோஷம் ஏற்பட்டால் திருமண வாழ்வு சுபிட்சமாக இருக்காது என தெரிவிக்கிறது. சூரிய கிரகத்தின் வரைபட விளக்கம் தரப்பட்டுள்ளது. புனர்பூ தோஷ ஜாதகருக்கு கிரக அமைப்பு பாதகமாக இருந்தாலும், கிரக தெய்வ தல வழிபாட்டால் நோய் பாதிப்பு தன்மையை குறைக்க முடியும் என்கிறது. ஜோதிடக் கலையை அறிந்து கொள்ள உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்


புதிய வீடியோ