/ புத்தக மதிப்புரை / புண்ணியத்தைத் தேடி...

₹ 50

முத்து முத்தான 16 சிறுகதைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு சிறுகதையும் ஒரு நீதி போதனையை தருகிறது. படிப்போர் உள்ளத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில், சத்தியத்தை வார்த்தையில் கையாண்டு உள்ளது. பணமே பிரதானம் என வாழும் இந்த காலத்தில், பாசத்தின் அருமை, பெருமைகளை சிறப்பாக எடுத்துரைக்கிறது, ‘ஆலம் விழுதுகள்’ என்ற கதை. உலகில் நடக்கும் அக்கிரமங்களை, மனசாட்சியே இல்லாமல் மனிதர்கள் நடந்து கொள்ளும் அவலம், கொடுமைகளை தோலுரித்து காட்டுகிறது, ‘போலிகள்’ சிறுகதை. ஆங்காங்கு நடக்கிற உண்மை சம்பவங்களை கதையாக வடித்து தருகிறது. மதம் பிடித்து திரிவோருக்கு புத்தி புகட்டும் கண்ணியமான கதைகளும் இடம் பெற்றுள்ள தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை