/ வாழ்க்கை வரலாறு / புரட்சிவீரன் பகத்சிங்
புரட்சிவீரன் பகத்சிங்
மக்கள் பிரச்னைகளை எதிர் கொண்டு போராட, வழிகாட்டியாக வாழ்ந்து, நாட்டுக்காக உயிர் நீத்தவர் பஞ்சாப் சிங்கம் பகத் சிங். அவரது வீர வரலாறு, நினைவைப் போற்றி எழுச்சி தரும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் மாவீரன் பகத் சிங் என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க, ஆயுதமேந்தி போராடிய இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பின் தலைவர்களில் ஒருவர். உண்மையான ஜனநாயகவாதி, ஆங்கில ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத் சிங் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக கூறும் நுால்.– வி.விஷ்வா