Advertisement

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் அன்றாட வாழ்வில் பார்க்கும், கேட்கும், உணரும் செயலாற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான் இந்நுால் என விளக்கம் தருகிறது. தண்ணீர் புவியின் உயிரோட்டம் இது. புவியின் பரப்பளவில் பூமிக்கு நீர்க்கோளம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு உயிர்ப்போராட்டம் கொடுக்கும் இயற்கை அமுதம் என்ற விளக்கமும் அதில் உள்ள தகவல்கள் உள்ளன. ‘ஆல்கே’ எனும் கடற்பாசியினம் தோன்றி, 310 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்ற கேள்வி இப்போது எழுவது இயற்கை எனும் இயற்கை செய்திகளுடன் தவளை, தேரை, டைனோசர், பல்லி, பாம்பு, ஆமைகள், நச்சற்ற இனங்கள், என விளக்கப்பட்டுள்ளது. அதிக நச்சுள்ள பாம்புகளின் வாழ்க்கை சூழலை இந்நுாலில் விரிவாக காண முடிகிறது. ௯௮ தலைப்புகளில் மிக ஆழமாக இயற்கை ஆய்வு நுாலுக்கு தகுந்தவாறு படைத்திருப்பது உள்ளபடியே பாராட்டத்தக்கதாகும்.– முனைவர் க.சங்கர்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்