/ ஆன்மிகம் / இராமேஸ்வரம்

₹ 155

இந்தியாவின் வட, தென் மாநிலங்களுக்குள் பண்பாட்டு பாலமாக திகழும் ராமேஸ்வரம் குறித்த தகவல்களை தரும் நுால். ஹிந்து மதத்தில் புண்ணிய தலங்களில் முக்கிய ஒன்றாக ராமேஸ்வரம் விளங்குவதை செய்திகள் வாயிலாக எடுத்துரைக்கிறது. காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் உள்ள தொடர்பு குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. புனித நீராடலில் முக்கிய இடமாக விளங்குவது குறித்து தெளிவான தகவல்கள் உள்ளன. ராமேஸ்வரத்தின் புனித வரலாறு, தீர்த்தங்களின் பெருமை, கோவில் அமைப்பு, அதன் சிறப்புகள் பற்றி விரிவாக தகவல்கள் தரப்பட்டுள்ளன. புராண, இலக்கியங்களில் இருந்து சான்றுகளுடன் செய்திகள் தரப்பட்டுள்ளன. புனித தலத்தின் வரலாற்று பெருமைகளையும் அறியத்தருகிறது. ராமேஸ்வரம் குறித்து சிறப்பான செய்திகளை தாங்கியுள்ள நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை