/ கதைகள் / ரயிலில் ஒரு பயணி

₹ 130

வாழும் கால நடப்புகளை முன்வைத்து சித்தரிக்கப் பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் நவீன சிந்தனையை துாண்டும் வகையில் உள்ளன. சமூகத்தில் அன்றாடம் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொண்டு இலகுவாக கடந்து செல்லும் வகையில் படைப்புகள் அமைந்துள்ளன. கதைகளின் மையக்கரு ஒரு பொருளில் துவங்கி, எதிர்பாராத திருப்பத்தை தந்து மற்றொன்றை நோக்கி நகர்வது சுவாரசியம் தருகிறது. வர்ணிப்புகள் வினோதமாக உள்ளன. தொகுப்பில் அமைந்துள்ள கதைகள் நடத்தை அறத்தையோ, உபதேசத்தையே முன்வைக்கவில்லை. எதையும் நம்பி பற்றிக் கொள்ளும் வகையில் கருத்துரைக்கவில்லை. ஆனால், சமூகத்தின் இயக்கத்தை சுட்டிக்காட்டி, அதை எளிதாக கடந்து செல்ல கற்று தருகின்றன. நவீனத்துவம் சார்ந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை