/ கதைகள் / சிவப்பு மூச்சு
சிவப்பு மூச்சு
மனித உறவுகளில் இடைவெளியை அலசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத கார் விபத்தால் ஏற்படும் குற்ற உணர்வை, ‘சிவப்பு மூச்சு’ கதை வலியுடன் கூறுகிறது. மனதில் ஏற்படும் விருப்பு, வெறுப்புகளை, ‘பூனை பிரியாணியும் காஷ்மீர் பனியும்’ கதை குற்றத்துடன் தொடர்பு படுத்தி சொல்கிறது. மகிழ்ச்சியின் தாக்கங்களை, ‘மஞ்சள் தவளையின் கண்கள்’ கதை நுட்பமாக விவரிக்கிறது. கண்முன் வரும்போதெல்லாம் பதற்றம் ஏற்படுத்தும் பல்லி போன்ற உயிரின நடத்தையை உளவியல் கண்ணோட்டத்தில் அலசி, ‘கண்ணில் மிதந்த கரும்பல்லி’ கதை விளக்குகிறது. யாசகம் பெறும் மூதாட்டி பற்றி, ‘கிழவியின் வெட்கம்’ கதை புதிய கண்ணோட்டம் தருகிறது. குற்றம் புரிந்து தப்பிக்க இயலாமல் மாட்டிக்கொள்வதால் ஏற்படும் மனச்சிதறலை கூறும் நுால். – டி.எஸ்.ராயன்




