/ கதைகள் / ருஷ்யக் கதைகள்

₹ 350

வித்தியாசமான சூழல் உடைய ரஷ்ய மக்களின் சமூக வாழ்வை மையமாக வைத்து படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ராணுவத்தினருக்கு அளிக்கும் சிகிச்சை செயல்பாடு மற்றும் பெண்கள் மீதுள்ள பார்வையை, ‘ஒரே கிராமத்தினர்’ என்ற தலைப்பிலான கதை மனதில் பதியில் வகையில் சித்தரிக்கிறது. போர் பாதிப்பு, தாயின் கண்ணீர் மற்றும் வீரத்தை, ‘தீபம்’ கதை பகிர்கிறது. போரில் காயமடைந்தோருக்கு சேவை செய்யும் மருத்துவரின் காதலை, ‘அவன் காதலி’ உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. வேலைக்காரன் பற்றிய சித்தரிப்பு, வேலை தேடுவோருக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. வாய்க்காலில் கிடந்த தானியத்தை அபூர்வ பொருளாக அரசனுக்கு விற்பதை, ‘அந்தக்காலம்’ கதை கூறுகிறது. சுவாரசியம் குன்றாத கதை நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி