சாபம் நீங்கிய கதைகள்
சாபம் என்பது சாதாரண விஷயமல்ல; ஒருவர் யாருக்காவது கடுமையான துன்பம் இழைத்து விட்டால், பாதிக்கப்பட்டவர் விடும் சாபம் அளப்பரிய துன்பத்தை தந்து விடும். அதிலிருந்து மீண்டு வருவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கும். பாமர மக்கள் மட்டுமல்ல, முனிவர்களும், யோகிகளும், ஞானிகளும் கூட சாபத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இதற்கும் மேலாக தெய்வங்களும், தெய்வப்பிறவிகளும் கூட சாபம் பெற்றிருக்கின்றனர் என்றால், யாருமே சாபத்திற்கு விதிவிலக்கு இல்லை என்பது தெளிவாகிறது. நெல்லையப்ப சுவாமி, திருமால், பிரம்மா, தேவகுரு பிரகஸ்பதி, நந்தி தேவர், காமதேனு பசு மற்றும் கற்பக விருட்சம், மகாபாரத கதாநாயகி திரவுபதி, நாமெல்லாம் வெறுத்து ஒதுக்கும் திதிகளான அஷ்டமி, நவமி கூட சாபம் பெற்றிருக்கின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! சில சமயங்களில் சாபங்கள் கூட மனித குலத்துக்கு நன்மை விளைவிப்பதாக அமைந்துள்ளன. 30 தெய்வப்பிறவிகள் பெற்ற சாபங்களையும், அந்த சாபங்கள் எவ்வாறு நீங்கப் பெற்றன என்பதையும் அருமையாக தொகுத்து உள்ளார் புத்தக ஆசிரியர் தேனி மு.சுப்பிரமணி. இதை படிக்கும் ஒவ்வொரு வரும் இனி யாருக்கும் துன்பம் இழைக்கக் கூடாது. குறிப்பாக சாபம் பெறக்கூடாது என்பதை உணர்வர் என்பது உறுதி. – தி.செல்லப்பா




