/ கட்டடம் / மாதிரி ஆவணங்கள் பத்திரம் எழுதும் முறை!
மாதிரி ஆவணங்கள் பத்திரம் எழுதும் முறை!
சொத்து ஆவண பத்திரங்களை முறையாக எழுதும் வழிமுறைகளை விளக்கும் நுால். உயில் வரைதல், ரத்து செய்தல், சொத்து தானம், அன்பளிப்பு, கட்டுமான ஒப்பந்தம், கூட்டு ஒப்பந்தம், குத்தகை பத்திரம், வாடகை பத்திரம், சொத்து அடமான பத்திரப்பதிவு நடைமுறையை விளக்குகிறது. ஒவ்வொரு வகை ஆவணத்திற்கும் எழுதும் முறையில் தனித்தன்மை இருப்பதை காட்டுகிறது. ஆவணங்களை எழுதுவதற்கான விதிமுறைகளுடன் மாதிரி ஆவணங்களும் தரப்பட்டுள்ளன. சொத்து ஆவணத்தில் சர்வே எண், எல்லை வரையறை போன்றவற்றை நிரப்புவதில் கவனத்தை வலியுறுத்துகிறது. பத்திரங்கள் தயாரிப்பதற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் பற்றியும் விளக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு