/ புத்தக மதிப்புரை / சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

₹ 230

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் முதன்மை பங்கு வகித்த அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நுால். மஹாராஷ்டிரா மாநிலத்தின் பெயர் எப்படி ஏற்பட்டது என்பதுடன் தொடங்குகிறது. ஒவ்வொரு பக்கத்திலும், உயிரோட்டம் உள்ள செய்திகளை, அடுக்கடுக்காக தந்து கொண்டே செல்கிறது. குழந்தைப் பருவத்தில் அம்பேத்கர் சந்தித்த தீண்டாமை கொடுமைகள், அவமானங்களை முறியடித்து வெற்றி கண்ட விபரம் உள்ளது. பரோடா மன்னர் செய்த பேருபகாரம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயரின் வட்டமேஜை மாநாட்டில், அம்பேத்கர் உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததை கூறுகிறது. அம்பேத்கரிடம், தமிழக தலைவர்கள் கொண்டிருந்த நட்பையும் விவரிக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை