/ புத்தக மதிப்புரை / சௌபாக்கியம் அளிக்கும் சௌண்டம்மன் புகழ்மாலை

₹ 100

---------------------------------------------------------------------- தி ருப்பூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை புகழும் பாமாலைகளின் தொகுப்பு நுால். நயமுடன், ‘மகிழம்பூ பூவெடுத்து மகாராணிக்கு சூடவந்தோம்...’ என துவங்குகிறது. பணிவுடன், ‘நெஞ்சத்தில் அருளாக, வெஞ்சினம் மறையும்படி வாருமம்மா’ என வேண்டுகிறது. ஆதிக்க நிலை அகற்றி, துர்வினை போக்க கோருகிறது. இல்லத்தில் இறங்கி வந்து இன்னலை தீர்க்க வேண்டுதல் செய்கிறது. மதிய வெயிலிலும் கத்தி போடும் நிகழ்ச்சியுடன், குடம் நிறைந்த பாலாலே அபிஷேகம் செய்வதை புகழ்ந்துரைக்கிறது. தேவாங்கர் இன மக்களை காக்கும் அன்னையின் பெருமைகளை விளக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை