/ வர்த்தகம் / தரத்துடன் இயங்கி தரச்சான்றிதழ் பெற சுலபமான ஆலோசனைகள்
தரத்துடன் இயங்கி தரச்சான்றிதழ் பெற சுலபமான ஆலோசனைகள்
நி றுவனங்கள் தரத்துடன் இயங்க வழிமுறைகளை கூறும் நுால். வாடிக்கையாளர் தேவை, சான்றிதழ் பெறுதல் குறித்து விளக்குகிறது. தொழில் தரம் துவங்கி, தரச் சான்றிதழ் படிவம் வரை, 11 கட்டுரைகளில் விளக்கம் தருகிறது. தரக் கட்டுப்பாட்டின் அடிப்படை செயல்களை விவரிக்கிறது. தரக் கட்டுப்பாட்டின் தனி நடைமுறை, நிர்வாகம் சந்திக்கும் தணிக்கைகள் பற்றி கூறுகிறது. தரச் சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் அலுவலக முகவரிகள் தரப்பட்டு உள்ளன. தரத் திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. எளிய வழியில் தரத்தை உயர்த்தவும், சான்றிதழ் பெறவும் வழி கூறுகிறது. வணிகர்களுக்கு பயன்படும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்




