/ கதைகள் / சிங்கத்தின் குகையில் விருந்து

₹ 120

சூழ்நிலையை உணர்ந்து நம்பிக்கையுடன் வாழ அறிவுரைக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர், சிறுமியருக்கு அறிவு புகட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நல்லொழுக்கம், சுந்தரவனம், கோலிக்குண்டு, கல்யாண விருந்து, திருடாதே, ஆனந்த யாழ், யாரும் அனாதை இல்லை, புயல், சிங்கத்தின் குகையில், கடலோடு விளையாடு, புனித மரம் உள்ளிட்ட தலைப்புகளில் புனையப்பட்டுள்ளன. சூழலை உணர்ந்து சுலபமாக வாழும் வழிமுறைகள் கதைகளில் சொல்லப்பட்டு உள்ளன. அறம், ஒழுக்கத்தை விவரிப்பின் வழியாக உணர்த்துகின்றன. சிறுவர்களுக்கு நல்லொழுக்கம் புகட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அறம் மிக்க சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ராம்


முக்கிய வீடியோ