/ புத்தக மதிப்புரை / சின்ன சின்ன அனுபவங்கள்
சின்ன சின்ன அனுபவங்கள்
வாழ்க்கை அனுபவங்களை சிறிய கதைகள் போல் தரும் நுால். ஒவ்வொரு பருவத்திலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் சுவாரசியம் குன்றாமல் பதிவாகியுள்ளன. ஆந்திராவில் குழந்தைப் பருவ நிகழ்வை தெளிவாக தருகிறது. கோதாவரி நதியில் குளித்தது மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து பள்ளி, கல்லுாரி கால வாழ்க்கையை சித்தரிக்கிறது. ஒவ்வொரு நினைவும், மிகச்சிறந்த தகவல்களை எளிய நடையில் அறியத்தருகிறது. உறவினர் திருமணத்தில் பங்கேற்ற போது நடந்தது கலகலப்பை ஊட்டுகிறது. வாழ்க்கையில் நினைவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சந்தித்தவர்களிடம் உள்ள தனிச்சிறப்புகளை எடுத்துரைக்கிறது. வாழ்க்கையை திரும்பி பார்த்து நினைவுகளை பதிவு செய்துள்ள நுால். – ராம்




