/ கவிதைகள் / புன்னகைத்துப் போ ஒரு புத்தகம் எழுத வேண்டும்

₹ 140

காதல் உணர்வால் இயற்கையை ரசிக்கலாம் என எடுத்துரைக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலகில் எல்லா இடங்களிலும், வானமும், காதலும் நிறைந்திருப்பதாக சொல்கிறது. காதல் வலி புதியதை பேச வைக்கும் என்கிறது. காதலரில் யார் முதலில் மரணித்தாலும், கண் தானம் செய்திருந்தால் அதன் வழியாக பார்க்க முடியும் என விழிப்புணர்வு ஊட்டுகிறது. மறுபிறவி ஒன்று இருந்தால், பூமியும் வானமுமாக அமைய விரும்புவதாக கூறுகிறது. திருமணம் செய்ய தகுதி கேட்ட காதலனிடம் தகுதியாக காதலி தருவது காதல். கண்ணீர் துளிகளிலும் காதல் நினைவுகள் நிறைந்திருப்பதாக சொல்கிறது. கைப்பட எழுதி அச்சாக்கம் செய்துள்ள புதுமை நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை