₹ 550

ஒரே குடும்பத்தில் பிறந்த, முற்றிலும் மாறுபட்ட குணாம்சங்கள் உடைய மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்திய நாவல். பாசம் நிறைந்த மூத்த சகோதரன் ரத்தினம், பயந்த சுபாவம் உடைய இரண்டாமவன் கோவிந்தன், அதிபுத்திசாலியான மூன்றாமவன் செந்தில் இடையே சொத்துகளை கைப்பற்றுவது தொடர்பான முரண்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ளது. மூவரும் சந்திக்கும் இன்னல்களை விறுவிறுப்புடன் விவரிக்கிறது. பணமும், சொத்தும் தான், ஒருவனை மற்றவர்களிடம் இருந்து மாறுபடுத்துவதை வெளிப்படுத்துகிறது. சொத்தால் உறவில் ஏற்படும் அதிருப்தி, மன விரசல்கள், வலி நிறைந்த செயல்பாடுகள், பொருத்தமான கதாபாத்திரங்கள் வழியாக சித்தரிக்கப்பட்டுள்ளன. திரண்ட செல்வத்தை அடைவது யார் என்பதை அறியும் ஆவலை துாண்டும் திருப்பங்களுடன் அமைந்துள்ளது. கதை நெடுக இணையும் பாத்திரங்கள் கலகலப்பை ஊட்டுகின்றன. ‘பணம் இல்லாத காரணத்தாலே திறமை வீண் போகக் கூடாது; திறமை தவிக்கும் போது பணம் துாங்கக் கூடாது’ என்பது போன்ற பொன்மொழிகள் நிறைந்துள்ளன. காட்சிகளின் தொகுப்பாக, 44 அத்தியாயங்களில் கதை அமைக்கப்பட்டுள்ளது. குமுதம் நிறுவிய ஆசிரியர் எஸ்.ஏ.பி., கற்பனையில் உருவான அற்புத நாவல், அவரது நுாற்றாண்டில் சிறப்பு வெளியீடாக மலர்ந்துள்ளது. – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை