/ வாழ்க்கை வரலாறு / சொல்லேர் உழவு

₹ 120

எழுத்தாளர்களின் படைப்பாளுமையை விவரிக்கும் நுால். கவிஞர் மற்றும் எழுத்தாளர்கள் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது. கவிஞர் சிற்பி தொடர்ந்து திரைத்துறையில் இயங்கி இருந்தால், கவித்துவ பாடல்களை கேட்டிருக்க முடியும் என்கிறது. நேர நிர்வாகம் வாழ்வின் அடிப்படை என கவிஞர் வைரமுத்து கடைபிடிப்பதை பகிர்கிறது. சூழலில் தளத்தை தேர்வு செய்து சிறுகதையாக்கும் மருத்துவர் கு.கவிதா தனித்துவத்தை சொல்கிறது. எழுத்துகள் வழியாக சினம் கொண்டு, குளிர வைக்கும் சந்திரகலா கவிதை தொகுப்பை சிலாகிக்கிறது. வெவ்வேறு முகங்களின் வெளிப்பாடுகளை சிறுகதைகளில் புகுத்திய, சு.சீ.நடராஜனின் எழுத்து நுட்பத்தை பகிர்கிறது. சின்ன சொற்களை படைப்பாக கோர்க்கும் திறனை சொல்லும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை